Tuesday, June 29, 2010

"கலையும் இலக்கியமும் "

"கலையும் இலக்கியமும் "
மக்களை மேம்படுத்தாத கலை என்பது போர்களமில்லாத போர்வீரர்கள் போன்றதுதான்.படைப்பாளிகள்,எழுதாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் வேலை பொதுமக்கள் பேசும் மொழியை கற்றுகொள்வது தான்.பொதுமக்கள் என்பவர்கள் யார்? நமது மக்கள் தொகையில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலுள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள் ஆவர்.உலகத்திலேயே பரிசுத்தமான மக்கள் தொழிலாளிகளும்,விவசாயிகளும்தான். அவர்கள் கையில் புழுதி படிந்து இருந்தாலும்,அவர்கள் கால்களில் சாணம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் தான் "பூர்ஷ்வா-குட்டி பூர்ச்வாக்களை விட சுத்தமானவர்கள்.நமது இலக்கியமும் ,கலையும் இவ்வர்கதிர்க்கு முதலில் சேவை செய்ய வேண்டும். ......................................................நமது தோழர்களில் பலருக்கும் குட்டி பூர்ஷ்வா மனோபாவமிருக்கிறது அவர்களில் பலர் ,படிப்பாளி வர்கத்தை சேர்ந்தவர்களாவர்.ஆகவே தான் அவர்கள் தங்களை போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும்,அதன் விளைவாக இந்த படிப்பாளி வர்கத்தை பற்றி ஆராயவும்,வர்ணிக்கவும் தலைபட்டுவிடுவதில் அவர்களுக்கு ஒரு பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. இதே காரியத்தை அவர்கள் பாட்டாளி வர்க்க மனோபாவத்தில் அவர்கள் செய்வார்களேயானால் அது மிகவும் பயனுடையதாக இருக்கும்.அனால் செய்வது இல்லை. குட்டி பூர்சுவா மனோபாவத்தில் இந்த தோழர்கள் ஆராய்வதும்,வர்நிபதுமாக குட்டி பூர்சுவா வர்கத்தை பிரதிபலிக்கும் நூல்களை போற்றுகிறார்கள்.குட்டி பூர்சுவா மனோபாவம் கொண்ட படிபாளிகளிடம் பரம அனுதாபம் காட்டுவதும், சிலசமயம் குட்டி பூர்சுவா குறைபாடுகளை அனுதாபத்தோடு பார்த்து,அதற்காக பரிந்து பேசுவதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.
இத்தகைய தோழர்களுக்கு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்களிடம்(மக்கள் போராளிகள்-அழுத்தம் நம்முடையது) உண்மையான தொடர்பு கிடையாது.அவர்களை பற்றிய ஆராய்ச்சியோ,விஷய ஞானமோ இல்லாதததாலும்,அவர்களிடையே நெருங்கிய நண்பர்கள் அதிகமில்லாததாலும் இந்த பகுதிகளை போதிய அளவு வர்ணிக்க அவர்களால் முடியவில்லை.....................................
இவர்கள் மக்கள் கலைகள் சுவரொட்டி சித்திரங்கள்,செய்திகள்,நாடோடி பாடல்கள்,பாமர கதைகள்,அவர்கள் வீட்டு மொழி போன்றவையை அருவெருக்கிறார்கள். அதே சமயம் பூர்சுவாக்களின் வாய் வீசுகளை ஏற்றுகொள்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குட்டி பூர்சுவா பக்கம் உள்ள வெளியின் மீது மிக வசதியாக அமர்ந்துகொண்டுள்ளார்கள்.இன்னும் நாசூக்காக சொல்லவேண்டுமென்றால் இவர்களது மேதாவிலாச ஆத்மாக்கள்,குட்டி பூர்சுவ மாளிகையில் விலாவி நடமாடுகின்றன.
..............................ஆக நம் எழுத்தாளர்களும்,கலைஞர்களும், படைப்பாளிகளும், தங்களது அடிப்படைகளை மாற்றிக்கொண்டு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் பக்கமாக,படிப்படியாக நகர்ந்து செல்லவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வூடுருவி புகுந்துகொள்ள வேண்டும். அவர்களது போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுதுகொள்ளவேண்டும்.
......ஒரு உண்மையான இலக்கியத்தையும்,கலையையும் தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் (மக்கள் போராளிகள் ) என இவ்வர்கதிர்க்காக படைப்பதே படைப்பாளியின் கடைமையாக இருக்க வேண்டும்.

கலை இலக்கியத்தை பற்றி யேனானில் 1942 may 2 to 23 வரையிலான சீன விடுதலை போராட்ட மாநாட்டில் பொதுவுடைமை தந்தை மாசேதுங் பேசியது.

Monday, June 21, 2010

my poem

எல்லோருக்கும் எல்லாம்
கிடைத்துவிட்டால்
கடவுள் எதற்கு?
கம்யுனிசம் எதற்கு?
ஒவ்வுறு மனங்களுக்கும்
ஒவ்வுறு தேடல்,ஒவ்வுறு
பயணம்.ஒரு
போமமலாட்டகாரனின் பிடியில்
இருக்கும் போம்மையாக்தான் என்
நேசிப்புகுரியவரின் பிடியில் நான்!
அரங்கம் அதிர ஆடினாலும்
ஆட்டத்திற்கு சொந்தக்காரன்
நானல்ல!காற்றின்
திசைக்கு தலையாட்டும்
இலைகளாகதான் என்
மனமும் அலைபாய்கிறது-
இலக்கு அறியாமல்!
தன்னை எரித்து நிலவுக்கு
உயிரூட்டினாலும்
சூரியனின் காதல்
நிலவுக்கு தெரிகிறதா என்னை!
தன்னை ஸ்பரிசித்து செல்லும்
மேகங்களிர்காகதானே
தவமிருக்கின்றன!
என்னதான் நதிகளை
கரைகள் காதலோடு
பாதுகாத்தாலும் நதியின்
தேடலோ கடலை சங்கமிப்பது தானே!
நதிகளை காக்கும் கரைகளின்
காதலாகத்தான் எண்
"மனமும்"-
என் கண்ணீர்
யாருக்கும் தெரிவதில்லை-
மழையில் அழும் மலர்களைப்போல!
இருந்தும் நேசிக்கிறேன்
வலியும் ரணமும்
ஆயிரம் கோடி
பருந்துகலாக நெஞ்சை
குத்தி தின்றாலும்
என் நேசிப்பில் குறைவில்லை
மனிதர்களை காக்க
என் பயணமும் தொடர்கிறது-
தொடர்வண்டியை சுமக்கும்
தண்டவாளமாய்!

‘இராவணன்’ - கார்ப்பரேட் ராமன்!

‘இராவணன்’ - கார்ப்பரேட் ராமன்!
நிகழ்காலத்தில் ஏற்படும் அரசியல் அதிர்வுகளை அப்படியே பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் கலையை (!) கற்றவர் மணிரத்னம். அதில் கொஞ்சமும் அச்சு பிசகாமல் வந்திருக்கும் அவரின் சமீபத்திய வெளியீடு “இராவணன்” தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் தேசிய சந்தையை குறி வைத்து எடுத்த இப்படத்தில் அவர் கையில் எடுத்திருப்பது இந்திய பழங்கடி மக்களின் பிரச்சனைகள்.
‘வரலாற்று நம்பிக்கைகள் + காட்சி திருட்டு + அக்குள் தொப்புள் தெரியும் ஆபாச நடனம் + பார்ப்பனிய புரட்சி = மணிரத்னம் படங்கள்’ என்ற அவரின் வழக்கமான ஃபார்முலாவை மீறாமல் வந்திருக்கும் இப்படம் பார்வையாளர்களை சிந்திக்க விடாமல் குழப்பியுள்ளது. பிரமாண்ட காட்சிகளின் மூலம் பிரமிப்பில் ஆழ்த்தி மறுபுறம் எக்காலத்திலும் மக்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டங்களில் அணிதிரண்டு விடக்கூடாது என்ற முதலாளிய சூழ்ச்சிகளை செவ்வென செய்திருக்கிறது.
பழைய இராமாயண கதையை இன்றைய கார்ப்பரேட் சமூகத்திற்கேற்ப மாற்றினாலும் பழைய நச்சுத்தன்மையை குறைவில்லாமல் நவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் பாமர மக்கள் மீது திணித்துள்ளார்,. மேட்டுக்குடிகளால் தூக்கி பிடிக்கப்பட்டும் புதுமைவாதி (!) மணிரத்னம்.
விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார். தன்னுடைய இராவணனில். தேசிய இன விடுதலை வேட்கை கொண்ட ஒரு போராளி பெண்ணை, கண்ணியமற்ற, பிழைப்புவாத இளைஞன் துரத்தி துரத்தி காதலித்து அவளை தன்னோடு சேர்த்து குண்டு வைத்து தற்கொலை செய்து கொள்கிறான். அத்தோடு அக்கொள்கையையும் சேர்த்து வெடித்து சிதற வைத்ததை ‘உயிரே’ வில் காட்டிய மணிரத்னம், இராவணனில் கொஞ்சம் மாற்றியுள்ளார். இங்கு போர்குணமிக்க போராளி-பழங்கடி ஆண். அவன் ஒரு நவநாகரீக மேட்டுக்குடி பெண்ணின் அதிகார திமிரையே வீரமென அசந்து காதலித்து அவள் கணவனால் சுடப்பட்டு வீழ்கிறான். பாமர மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இக்‘கள்ளக்காதலுக்காக’ தன்னையே இழக்கும் போராளியின் இறப்பின் மூலம் பழங்குடி மக்களின் உரிமைகளையும் சேர்த்து அந்த மலையிலிருந்து தள்ளி கொன்றுவிடுகிறார் இந்த இந்து பார்ப்பன விடுதலை விரும்பி!
முதலில் பிறர் மனைவியை ஒரு போராளி நேசிப்பதாக காட்டுவதே கேடுகெட்டதனம். போராளிகளை ஒழுங்கீனமானவர்களாக சித்தரிப்பதன் மூலம் உரிமைகளுக்கான போராட்டங்கள் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் பார்ப்பன சூழ்ச்சி யே இது.
ஆதிக்க வெறியை உதிர்த்த வார்த்தைகளிலும், ஒற்றைப் பார்வையிலும், நீளமான கூந்தல் முகத்தில் பட்ட பரவசத்திலும் காதல் வந்து போராளி வீழ்ந்து போவதாக எந்த தைரியத்தில் கதை அமைத்தீர் திருவாளர் மணிரத்னம் அவர்களே! எதற்காக இந்த புனைவு? என்ன சொல்ல வருகிறீர்? ஆயுதம் வேண்டாம், அரசே! கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டாம், மக்களுக்காக போராடும் போராளிகளை சாய்க்க ஒரு பெண் போதும் என்கிறீரா? பெண்ணின் கடைக்கண் பார்வையில் கொள்கையை பலியிட்டு விடுவர் போராளிகள் என எக்காளமிடுகிறீர்களா? உங்கள் அத்தியாயத்தில் காதல் என்றால் இதுதானா? நுகர்வு கலாச்சார போதையில் உடலை பிரதானமாக்கி, மூலதனமாக்கி காதலிக்க உங்கள் மேட்டுக்கடி வர்க்கத்தால் மட்டுமே முடியும். அதையும் தான், அந்த கீழ்த்தரமான காமத்தையும் தான் இரவு பார்ட்டிகளில் உடல் உரசலில் பற்றி கொள்ளும் டேட்டிங் காதலாக ‘ஆயுத எழுத்தில்’ திரிசா-சித்தார்த் கதாபாத்திரங்கள் மூலம் காட்டி கடைச்சரக்காக்கி விட்டீரே!
ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் காதல் இப்படிப்பட்டதல்ல. எம் வர்க்கத்தின் காதல் கண்கள் சந்தித்த உடன் பற்றிக்கொள்ளும் நெருப்பல்ல. உணர்வுகளால் கலந்து கொண்ட இரண்டு உள்ளங்களின் அழகிய ஈர்ப்பு. போராளிகளுக்கு காதல் வரும் அது கருத்துக்களால், கொள்கைகளை அன்பாய் பரிமாறிய இரண்டு உயிர்கள் ஓருயிராய் சங்கமித்து ஒற்றை இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் வீரிய பயணம்.
அதிகார வெறிபிடித்த மேட்டுக்குடி கழிசடைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தின் காதல் தெரியாது. புரியாது. எங்கள் உடம்புகளில் உங்கள் இச்சைகளை திணிக்காதீர்.
ரோஜாவில் காஷ்மீரிகளையும், பம்பாயில் இசுலாமியர்களையும், உயிரேவில் இந்தியாவின் கிழக்கு மாகாண மக்களையும், கன்னத்தில் முத்தமிட்டாலில் ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்திய மணிரத்னம் இராவணனில் பழங்குடிகளை அடிபாதாளம் வரை சென்று இழிவுப்படுத்தியுள்ளார்.
எஸ்.டி.எஃப் (ளுகூகு) காவல்படையினரை கொடூரமாக வெட்டி, உயிரோடு தீவைத்து கொளுத்தி தொடக்க காட்சியிலேயே பழங்குடிமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார் இந்த பார்ப்பன புரட்டுவாதி. காட்டுமிராண்டிகளை போல கொடூரமாக காட்டி, கோபமும் வெறியுமே அவர்கள் பண்பாடாக காட்டி, உண்மையான பழங்குடி மக்களின் பண்பாட்டை பாழ்படுத்தியுள்ளார். இயற்கையோடு இணைந்து, கிடைத்ததை உண்டு வாழும் தேவைக்கான வாழ்க்கையை நடத்தும் சமத்துவவாதிகள் தான் பழங்குடிகள். மணிரத்னம் தூக்கிப் பிடிக்கும் மேட்டுக்குடிகளை போல லாபத்திற்கான சுரண்டலை செய்யும் மிருகங்களல்ல பழங்குடிகள்.
படம் துவங்கிய உடன் கொடூரமாய் கொலைவெறி பிடித்தவர்களாய் காட்டியதன் மூலம் முதலிலேயே பழங்குடிகள் செய்யும் அனைத்தும் மோசமானதாய் இருக்கும் என நம்பும் வகையில் படம் பார்க்கும் பார்வையாளனை தயார்படுத்திவிடுகிறார். இதனால் பார்வையாளர்களிடம் வில்லனாக்கப்பட்ட பழங்குடிகளின் நியாயங்கள் எடுபடாமலே போய்விடுகிறது. அதன்பின் மிஸ்டர் மணிக்கு வேலை சுலபமாகி விடுகிறது. காவல்துறை கொடூரங்களை, அத்து மீறல்களை காட்சிகளாய் அடுக்கி கொண்டே போனாலும் பார்வையாளர்களிடம் எவ்வித எதிர்ப்புமில்லை. பழங்குடிகள் செய்த கொடுமைகளை தடுக்க தான் பாவம் காவல்துறை இப்படி எல்லை மீறுகின்றனர் என பார்வையாளர்களை சால்ஜாப்பு சொல்ல வைத்துவிடுகிறார். எப்படியென்றால் தொடர்ச்சியாக ரவுடிகளை என்கவுண்டர் செய்து வரும் காவல்துறை சட்டென அடுத்து போராளிகளை சுட்டு கொல்ல, அவரையும் மக்கள் ரவுடியாகவே எண்ணிவிடுவர். நிஜத்தில் தரகு முதலாளிய அரசு செய்யும் இந்த இழி தந்திரத்தை திரையில் செய்துள்ளார் முதலாளிய வர்க்கத்தை அண்டிப்பிழைக்கும் புதுமை (!) படைப்பாளி மணிரத்னம்.
இதன் நீட்சி தான் கதாநாயகன் பழங்குடி தலைவன் வீராவின் (விக்ரம்) தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி) தன்னை காவல்துறையினர் கற்பழித்துவிட்டதாக கதறும் போது கூட எந்தவித சலனமுமில்லாமல் பார்வையாளர்கள் படம் பார்க்கின்றனர். ஈழத்தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் போதே வேடிக்கை பார்த்த நடுத்தர வர்க்கம் இதற்கு மட்டும் பெண்ணுக்கெதிரான கொடுமையென கிளர்ந்தெழுந்து திரையை கிழித்துவிடுவார்களா என்ன! அதே சமயம் இப்படிப்பட்ட தவறு செய்யும் காவலர்கள் கூட முறுக்குமீசை வைத்து ‘ஏலேய்’ என திருநெல்வேலி மொழி பேசும் இடைநிலை சாதியினர் தான். ஆனால் வெள்ளை நிறத்தில், மீசை மழித்து மொழு மொழுவென எஸ்.டி.எஃப் தலைமை உயரதிகாரி பார்ப்பன தேவ் பிரகாஷ் (பிரித்விராஜ்) மிக ஒழுக்கமானவராம். அதாவது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மீது வன்முறை செலுத்துவது, தரம்கெட்டு நடப்பது இடைநிலை சாதியினர் அதாவது சூத்திரர்கள்தான். ‘நாங்கள் எதிரியாய் இருப்பவர்களிடமும் சரியாக நடக்கும் நியாயவாதிகள்’ என கட்டமைக்கும் மனுதர்ம மொழியிது. இடதுசாரிகளின், புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களாலும், நம் அய்யா பெரியாரின் சீர்திருத்த போராட்டங்களாலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்-இடைநிலை சாதி மக்களுக்கும் ஏற்பட்ட, ஏற்பட்டு வரும் ஒற்றுமையை கண்டு பொருமி போய் வைத்த சாட்சி சதியை தவிர வேறொன்றுமில்லை.
‘வீராவை அவன் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். இருந்தாலும் அவன் கெட்டவன் அவனை அழிக்கணும்’ என்கிறான் தேவ் பிரகாஷ். சில நிமிடங்களில் பழங்குடி மக்களை விசாரிக்கிறான் தேவ் பிரகாஷ். அப்போது “வீரா ‘நல்லவன்’, ‘மிருகன் போன்றவன்’, ‘கோமாளி’, ‘கெட்டவன்’, ‘பெண் பித்தன்’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறர்கள். அதாவது சொந்த மக்களிடமே போராளி (வீரா) தள்ளி இருக்கிறான். ஆதரவு இல்லை என தனிமைப்படுத்தும் முயற்சியிது. யதார்த்தத்தில் போராளியென்பவன் மக்களில் இருந்து வருபவனே. மக்களை திரட்டி போராட்டத்தையும், புரட்சியையும் நடத்துபவனே போராளி. உண்மையை வரலாற்றை மாற்றி சொல்வது பார்ப்பனர்களுக்கு புதுசொன்றுமில்லை. சிந்து சமவெளி நாகரிகத்தையே ஆரிய நாகரிகமாக சித்தரிப்பவர்கள் தானே!
படத்தின் வசனங்கள் சுகாசினி வழக்கமாக தனது படங்களுக்கு “பீட்டர் பார்ட்டி” சுஜாதாவை பயன்படுத்துவார் மணி. பாவம் அவர் இறப்புக்குப்பின் (தமிழர்கள் தப்பித்தனர்) வசன பஞ்சத்தால் தன் மனைவியையே வசனகர்த்தாவாக்கிவிட்டார்.தொலை
காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு வாயில் நுழையாத பெயர்களை, சினிமாக்களை எல்லாம் சொல்லி விடும் பீலாவை இப்படத்திலும் பேச தவறவில்லை நம்ம அம்மையார் சுகாசினி. அப்படியே பெண் இனத்துக்கே போராடும் புதுமைப் பெண் போல தான் ராகினியை (என்ன ஒரு தமிழ்ப்பெயர் ஆஹா!) (ஐஸ்வர்யாராய்) பேச வைத்துள்ளார். ‘ஆண்களின் சண்டையில ஏன் பெண்களை இழுக்குறீங்க’ என்கிறார். பெண்ணியவாதி சுகாசினி அவர்களே! பெண்கள் பங்கேற்காமல் எந்த புரட்சியும், விடுதலையும் வென்றதாக வரலாறில்லை. ஈழ விடுதலைப் போரில், இசுரேலுக்கெதிரான பாலஸ்தீன விடுதலைப் போரில், நேபாள வர்க்க போரில் பெருமளவு வீரமாக பங்கேற்றது பெண்களே. உங்க பெண் விடுதலையென்பது இரவு பார்ட்டிகளுக்கு செல்வதும், டி.வியில் லேடிஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது மட்டும் தானா? ஆனால் இவ்வளவு வியாக்கியானம் பேசும் சுகாசினி அதே பெண்ணை துருப்பு சீட்டாக வைத்து தான் இறுதியில் தந்திரமாக வீராவை கொல்வான் தேவ்பிரகாஷ். வாலியை மறைந்து நின்று கொன்ற புராண ராமனுக்கும் இந்த நவீன ராமனுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. இதை என்னவென்று சொல்வார் இந்த உயர் வர்க்க பெண்ணியாதி? தங்கள் சாதி நலனுக்காக பொது சட்டத்தை மீறுவது குற்றமாகாது என்ற மனுதர்மத்தின் கணிப்பொறி திரை வடிவம் தான் இக்காட்சிகள் போல!
‘உயிரை பறிக்கும் உரிமையை யார் தந்தார்?’ என்று வீராவிடம் கேள்வி கேட்டு மனித உரிமை முலாம் பூசும் மானம் கெட்டவர்களே, அதையே தான் திருப்பி கேட்கிறோம். “மக்களை கொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தார்கள்?’ பல லட்சம் கோடிகளாக மக்கள் பணத்தை சுரண்டும் அம்பானி போன்ற முதலாளிகளா?
தனிமனித வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியென்று அம்பானியின் வாழ்க்கையை ‘குரு’வில் வணிகமாக்கினீர். நக்கி பிழைத்த அந்த விசுவாசத்திற்காக நன்றி கடனாக ரிலையன்ஸ் அம்பானி இப்படத்தை தயாரித்திருக்கலாம்.
ஆனால் அவரால் இந்திய உழைக்கும் மக்கள் மேலும் ஓட்டாண்டியானது தான் மிச்சம். தமிழகத்தில் மளிகை கடை, காய் கடை நடத்தி வந்தவர்கள். ரிலையன்ஸ் பிரெஷ்னரால் வாழ்க்கையிழந்து, எதிர்காலமிழந்து வறுமையில் தள்ளப்பட்டவர்கள் பல லட்சம். அதில் மானத்தோடு வாழ்ந்த பல குடும்ப பெண்கள் வறுமை சூழலால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட கொடூரம் இன்றும் நடந்து வருகிறது. பயாஸ்கோப் போட்டு பார்த்தாலும் பூனூல் பெண்ணியவாதிளுக்கு இவைகள் தெரியாது. தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் உணர்ச்சியெல்லாம் உயர்வர்க்க பெண்களின் நுகர்வு பண்பாட்டு சுதந்திரத்தை பெறுவதற்கான வெற்று முழக்கங்களே தவிர வேறெதுவுமில்லை.
அருவிக்கு இடையே உயர்ந்த, சாய்ந்த பிரமாண்ட பெருமாளுக்கு முன் ராகினி கண்ணீரோடு வேண்டுகிறார். “கடவுளே அவர்களை (பழங்குடிகள்) கெட்டவர்களாகவே காட்டு. ஏன் எனக்கு இரக்கத்தை கொடுக்கிறாய். எனக்கு மீண்டும் கோபத்தை கொடு” என்கிறார். அப்படியென்றால் ராகினிக்கு வீரா மீது காதல் அல்லது கரிசனம் வந்துவிட்டதா? நியாயவாதி என்று ஏற்றுக் கொண்டாரா? நியாயம் என்று பட்டால் அதன்பக்கம் நிற்பதுதானே மனசாட்சிக்கு கட்டுப்பட்ட அல்லது நீங்கள் சொல்வது போல உங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்ட ஒன்றாக இருக்கும்! அதையும் தாண்டி ‘அவர்கள் கெட்டவர்கள் பழையபடி அவர்களை வெறுக்க கோபம் கொடு’ என்றால் இது அப்படிப்பட்ட மான சாதீய தூய்மைவாதம் தவிர வெறென்ன! நல்லவனும் கெட்டவனும் உருவாவது சமூகத்தால் தான் என்பது உண்மையை நம்புபவர்களின் கூற்று. ஆனால் நல்லவனும் கெட்டவனும் உருவாவது பிறப்பின் அடிப்படையில் என்பது மனுதர்மமில்லாமல் வேறென்ன! கெட்டவன் யார்? நல்லவன் யார்? என்று அடையாளம் காட்டு என்பது தான் சராசரிகளின் இறை வேண்டுதலாக இருக்கும். கெட்டவன் என ஏற்கனவே முடிவெடுத்து அதில் உறுதியாக இருக்க வரம் கேட்பது என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதனை பார்க்கும் சாதீய வெறியில்லாமல் வேறென்ன? தற்போது பெருகி வரும் நகரமயத்தாலும், சமூக சீர்திருத்தத்தாலும் பெருமளவு சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து வருகிறது. அதே போல் உலகமயத்திற்கு பின் ஏகாதிபத்திய சுரண்டல்களால் பழைய மரபுகள் உடைக்கப்பட்டும், வாழ்க்கை தேவையினால் அதை எதிர்க்கும் பொருட்டு உயர் வர்க்க, சாதிகளில் இருந்து ஒருபிரிவு ‘சனநாயகத்தை’ நோக்கி வந்து கொண்டு உள்ளனர். இதை பொறுத்து கொள்ள முடியா சாதீய வெறி தான், மனமாற்றம் ஏற்பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளாமல் கடவுளிடம் வேண்டும் பார்ப்பனிய தூய்மைவாதம். தீட்டு கழிக்கும் பார்ப்பனவாதம். தனியாக 14 நாட்கள் காட்டில் கணவனை விட்டு பிரிந்து இருந்தாலும் களங்கமில்லாமல் இருப்பதாக காட்டும் சாதீய நிலவுடைமை பார்வையே இது. கற்பு என்பது உடலில் இல்லை. மனதில் இருக்கிறது. அப்பட்டமாக சாதீய வெறியும், பார்ப்பனிய நஞ்சையும் உமிழும் புர்ச்சியவாதி மணிரத்னத்தையும், பூனூல் பெண்ணியவாதி சுகாசினியையும் ஏன் பி.சி.ஆர் சட்டத்தில் உள்ளே தள்ள கூடாது? அப்புறம் இன்னொரு கேள்வி புர்ச்சியாளரே! பழங்குடிகள் காட்டில் பிரமாண்ட பெருமாள் சாமி எங்கு வந்தது?
இராமாயண வடிவில் பழங்குடி மக்களின் படம் என்று விளம்பரம் செய்தே சந்தையில் இலாபம் பார்க்கும் இப்படம் உண்மையில் எள்ளளவு கூட பழங்குடி மக்கள் பற்றி பேசவில்லை. ‘கோடு போட்டா’ என்ற வைரமுத்துவின் ஒற்றைப் பாடலில் மட்டும் மேலோட்டமாக பழங்குடிகளின் நியாயங்களை சொல்லிவிட்டு கடந்து விடுகின்றனர். அதிலும் வார்த்தைகளை தின்ற இசையின் இரைச்சல் தான் அதிகம். அதை தாண்டி ரசிகர்கள் ராகினி, தேவ் பிரகாஷ் நச்சு கருத்துக்களுக்கு பதிலடி தருவார் வீரா என எதிர்ப்பார்த்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். வீரா பெரும்பாலும் “பக் பக்” என்ற கோழி கத்துவதை போலவே கத்தி பதில் தருகிறார். இதை கடந்து பேச தொடங்கினால் பேச்சுக்கு பின் ஓடும் பின்னணி இசை வசனத்தின் ஒலியை குறைத்துவிடுகிறது. ஆஸ்கார் தமிழன் ரஹ்மான் மிக அழகாக பார்ப்பனியத்திற்கு அடிமை விசுவாசத்தை காட்டியுள்ளார். இவை எல்லாவற்றையும் விட வீரா பேசி ஏதாவது மாற்றம் உருவாகிவிட்டால்....?! என பதறி அவர் தொண்டையில் தேவ் பிரகாஷை சுட வைத்து பேச விடாதபடி செய்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
ஆரசியல் படம் எடுப்பதாக பீற்றிக் கொள்கிறீரே மிஸ்டர் புர்ச்சியாளரே அரசியல் படம், படைப்பு என்றால் என்னன்னு தெரியுமா? சரி சரி உங்களுக்கா தெரியாமலிருக்கும். தெரியாமலா ஆய்த எழுத்து க்ளைமாக்ஸில் திராவிட கொள்கையை வீழ்த்திவிட்டு சட்டமன்றத்திற்குள் செல்லும் இளைஞர்களில், சன்னமாக காவி உடை போட்ட பெண்ணையும் அனுப்பி உங்க இந்துத்துவ பாசத்தை காட்டிடீங்களே! ‘கருப்பை ‘ வீழ்த்துகிறதாம் ‘காவி’ அடடே என்னே ஒரு அரசியல். ஆனால் நாங்கள் சொல்லும் அரசியல் படம் அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்பதே!
சரி இதெல்லாம் உங்ககிட்ட பேசி பிரயோஜனமில்லை. இருந்தாலும் கடைசியா ஒண்ணே ஒண்ணு கேட்டுகிறேன். அதென்ன போராட வரனும்னாவே யாராவது ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகனுமா ? உயிரேவில, கன்னத்தில் முத்தமிட்டால், இப்ப இராவணன்ல வெண்ணிலானு கற்பழிக்கப்படுறாங்க. உடனே இதை கண்டு கோபம் பொங்கி கதை நாயகனோ, நாயகியோ போராளியா மாறிடுறாங்க உங்க அரசியல்படி. என்னங்க நடக்குது இங்க. போராட்டம் என்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு தொடங்குறது போல சித்தரிக்கறீங்க...?
போராட்டமோ, புரட்சியோ சமூக பொருளாதார அடிப்படையில் அமைவது. தங்கள் மொழியோ, இனமோ, உரிமைகளோ ஒடுக்கப்படுபவர்களால் அடிமைப்படுத்தப்படும் போது அதை எதிர்த்து உரிமைகளுக்காய் ஒலிக்கும் குரல்-போராட்டம். அதில் உரிமை மீட்கும் போர்-புரட்சி. இதை ஒடுக்கவே ஒடுக்கும் வர்கம் அல்லது ஒடுக்கும் அரசு ஒடுக்கப்படும் வர்கத்தின் மீது பாலியல் வன்புணர்ச்சி போன்ற கொடூர வன்முறைகளை செலுத்துவது, செலுத்துகிறது. அடிப்படை பிரச்சினையை தொடாமல் மேலோட்டமா வன்முறை சம்பவங்களை எடுத்துக்கொண்டு இதிலிருந்து தான் போராட்டங்கள் தொடங்குவதாக சொல்லும் புளுகு வேலையை நிறுத்துங்க. பழைய ரஜினிகாந்த் பட கதாநாயகத்தனத்தை எல்லாம் போராளித்தனமா எங்ககிட்ட காட்டாதீங்க...!
நீங்கள் சொல்வது போல் எம் பழங்குடி பெண்கள் மீது வன்முறை செலுத்தியதால் தான் பழங்குடி மக்கள் போராட வரவில்லை. அது அதிலொரு பகுதியே, ஆனால் எதார்த்தமான உண்மை என்னவென்று இங்கு காண்போம்.
ஒரிசாவில் உள்ள பாக்சைட், இரும்பு கனிம வளத்தின் குறைந்ததபட்ச மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர். அதாவது 200 லட்சம் கோடி ரூபாய். இவையில்லாமல் சட்பீஸ்கர், ஜார்காண்ட் போன்ற மாநிலங்களில் மட்டும் யுரேனியம், டாலமைட், இரும்பு தாது உட்பட்ட 28 வகைக்கும் மேலான அரிய வகை கனிம வளங்கள் பல கோடி டன்கள் உள்ளன. இந்த வளங்கள் மைய அரசால் கிட்டதட்ட 90க்கும்
மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டுள்ளன.இதற்க்கு டாடா, பிர்லா, இராவணன்
படம் தயாரித்த அம்பானி, கோயங்கோ போன்ற உள்நாட்டு பெரு முதலாளிகள் தரகர்களாக உள்ளனர். இங்கு தொன்மையிலிருந்த பூர்வ குடிகளாக உள்ள பழங்குடி மக்களுக்கு இதை அனுபவிக்க எள்ளளவும் உரிமையில்லை.
1950 லிருந்து 1990 வரை மட்டும் ஏறத்தாழ ஒரு கோடியே 85 லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். 90க்கு பின்னான உலகமய, தாராளமய கொள்கைக்குப்பின் துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் இரு மடங்காக பெருகிவிட்டனர்.
தமிழகத்தில் கூட 16,000 சதுர கி.மீ. பரப்பளவுல்ல காடுகளை குறிவைத்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசை தாரை வார்த்து தரும்படி கேட்க அதற்கு தடையாக இருந்த வீரப்பனை அந்தடிப்படையில் தான் கொன்றது கடந்த ஜெயலலிதா அரசு என குற்றம் சாட்டுவர் இடதுசாரிகள். ஆக துரத்தியடிக்கப்பட்ட, வாழ்விடங்கள் பறிக்கப்பட்ட பழங்குடி மக்கள் அதை மீட்க போராடி வருகின்றனர். கூர்மையடைந்த போராட்டத்தை ஒடுக்க மய்ய அரசால் உருவாக்கப்பட்டது தான் பச்சை வேட்டை என்ற OPERATION GREEN HUNT. இந்த சிறப்பு இராணுவ படையின் அத்துமீறலும் அராஜக நடவடிக்கைகளின் சாகசவாதமான திரை வடிவம் தான் மணிரத்னத்தின் இராவணன். அதனால் தான் ராகினியின் மூலம் “கொல்ல உரிமை தந்தது யார்? என கேட்ட சுகாசினியும், மணிரத்னமும் “தடையா இருந்தா என்கவுண்டர் செஞ்சிட்டு போயிட்டே இருங்களேன்” என ஆணவமாக மற்றொரு இடத்தில் பழங்குடிகளுக்கு எதிராக கொக்கரிக்கின்றனர். தரகு முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு பயங்கரவாதத்தின் குரலாக ஒலிக்கிறது இராவணன். அதுதான் ஒருபுறம் ஆயுதங்களால் தரகு முதலாளிய அரசு பழங்குடிகளை ஒடுக்கி வர மறுபுறம் மணிரத்னம் போன்ற பூனூல் தேசியவாதிகள் கள்ளக்காதல் மூலம் போராளிகளை வீழ்த்தும் விஷுவல் விசத்தை படமாக்கி பரப்புகின்றனர். இதற்கு பலியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அப்பாவி (!) ஏ சென்டர் அறிவுஜீவி அடிமைகள் கேமரா ஷாட், லொகேசன்ஸ்னு வித்தியாசமாக, பிரமாண்டமா காட்டி மிரட்டிட்டாரு மணிரத்னம்” என்கின்றனர். அசிங்கத்தை டாப் ஏங்கிளில் காட்டினால் என்ன? ஒயிடு ஏங்கிளில் காட்டினாலென்ன? அசிங்கம் அசிங்கம் தானே. ‘விசத்தை தருகிறார்’ என்கிறோம் நாம். ‘தேன் தடவி, சர்க்கரை கலந்து தருகிறார் இனிப்பாய் இருக்கிறது’ என்பதை போல தான் தொழில்நுட்ப ரீதியாக மணிரத்னத்தின் படைப்பை பாராட்டுவதாகும். இந்த பிரமிப்பை தான் தனக்கான மூலதனமாக்கி, நம் வர்க்கத்திற்கெதிராக படம் எடுத்து சந்தையாக்கி, கொள்ளை இலாபமும் அடித்துவிடுகிறார். டி.வி. பெண்ணியவாதியான ( தொலைக்காட்சியில் மட்டும் வாய்கிழிய பெண்ணியம் பேசும் குரூப்கள்) சுகாசினியின் கணவர்.
புர்ச்சியாளர் மணிரத்னமே !
எதிரி நேருக்கு நேர் எதிர்ப்பான்
துரோகி உறவாடி கெடுப்பான்
துரோகத்தின் மொழி தான் பார்ப்பனியம். தமிழகத்தில் கோலோச்சிய பகுத்தறிவு கொள்கையினால் தன் வர்க்கம் விழாமலிருக்க தன்னை கடவுள் மறுப்பாளராக காட்டிக் கொண்டே பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் தரகு முதலாளி தாசரே நம் புர்ச்சியாளர் மணிரத்னம். அதற்கு எள்ளளவும் குறைவில்லாமல் ஒத்துழைப்பு தந்துள்ளார் அவர் மனைவி சுகாசினி.
வர்னாஸ்ரம கால இராமாயண இராமன் தமிழினத்தை அழித்து பூர்வகுடிகளை அழித்து தமிழன் இராவணனை கொன்று வளங்களை சூறையாடினான். அந்த ராமனிடம் கூட மனைவியை சந்தேகப்பட்ட குறையிருக்கும். ஆனால் மணிரத்னமோ ஒரு படி மேலே போய் தேவ் பிரகாஷ் மனைவியை சந்தேகப்பட்டதே எதிரியான பழங்குடி வீராவை அழிக்க தான் என புது விளக்கம் தந்து தங்கள் பார்ப்பனியத்தின் மீதான களங்கத்தை போக்கியுள்ளார். புதிய சனநாயக நம்பிக்கையாளர்களான நாம் ஒடுக்கப்பட்ட, பழங்குடி, உழைக்கும் மக்களை குறி வைத்து இராவணன் பெயரில் வந்துள்ள நவீன இராமனை “கார்ப்பரேட் ராமனை” அழிக்க தவறினால் ‘சமத்துவம்’ நோக்கிய நமது பயணம் முழுமையடையாது.
புர்ச்சியாளர் மணிரத்னம் மேட்டுக்குடி ரசிக சிகாமணிகளுக்கு இரண்டே கேள்விகள்.
1. அறிவு ஜீவி என பீற்றிக் கொள்ளும் மணிரத்னம் தென்மாவட்டத்தில் நடைபெறும் கதையில் வாகனங்கள் மட்டும் எப்படி கூசூ27 என தாங்கி வரும் சேலம் வாகனமானது?
2. கண்ணை கட்டியே கூட்டி போகும் ஐஸ்வர்யாராய் இறுதி காட்சியில் எப்படி சரியாக விக்ரமை தேடி போகிறார்?

குழப்பம் தீர்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

ஆக்கம் ,

தமிழ்செல்வன்
சேலம்
98435-55110