Sunday, September 12, 2010

நக்சலைட்

நக்சலைட்

'பசித்தவனுக்கு சோறுபோடு'

போதித்தான் ஒருவன்

'பசித்தவனை படைத்தவன் எவன்?

' கேள்விகேட்டான் மற்றொருவன்

இருவரும் தொலைகாட்சியில்

ஒருவன் ஞானியாய்!

மற்றவன் நக்சலைட்டாய்!





"குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்'-

அரசு அறிவிப்பு"- சுவர் விடாமல் எழுதி வந்தான்

கூலிக்கு அமர்த்தப்பட்ட சிறுவன் !



செய்தியாளன்

தொழிலாளர்கள் பிரச்சனைகளை

பக்கம் பக்கமாக எழுதினான்

மூன்று மாத சம்பளபாக்கியோடு!





கூந்தல்

பூக்களை சுமந்தாலும்

கிளைகளை சூடிகொள்வதில்லை

எந்த கூந்தலும்!



மரம்

"தன்னை வெய்யிலில்

நிறுத்திக்கொண்டு

நிழல் தருகிறது- 'மரம்'!"



"விதைத்தால் மட்டுமல்ல

எரித்தாலும் வளர்வோம்

- முள்ளிவாய்க்கால் தமிழன் "



வேலி

பூக்களை காக்க

வேலி

வேலியை காக்க?-



விடியல்

உலகின் விடியல்

கிழக்கில்

தமிழின் விடியல்

'தெற்கில்'-ஈழம்!



உறவு

உறவுகளின் தொடக்கம்

அம்மா

தமிழனின் தொடக்கம்

'தம்பி'!



தனிமை

"தாயுண்டு தாய்மையில்லை

காதலியுண்டு காதலில்லை

நண்பர்களுண்டு நட்பில்லை

- தனிமை கொடிதிலும் கொடிது!"



பயணம்

"எறும்பின் பாதையில்

யானை பெரிது

பருந்தின் பார்வையில்

யானையோ எறும்பு

- என் பயணம் தொடர்கிறது.!!"



எந்திரன் படக்குழு

சதைகளை காட்டி

தமிழன் ரத்தம்உறியும்

அட்டைகள்-

"எந்திரன் படக்குழு"



நான்

பூக்களின் தேசத்தில்

வேர்களுக்கு மதிப்பில்லை!

-வேர்களாய் நான்!



குழந்தைகள் நிகழ்ச்சி

கண்ணீரும் மூலதனம்

புன்னகையும் மூலதனம்

தொலைகாட்சிகளில்

குழந்தைகள் நிகழ்ச்சி...

தமிழக ஆட்சி

‎"மதுரைக்கு கீழே

தென்னாடு மூத்தவருக்கு,

மதுரைக்கு மேலே

வடநாடு இளையவருக்கு..

ஆம்....

மன்னராட்சி ஒழிந்துவிட்டது.

'மக்கள்' ஆட்சி மலர்ந்துவிட்டது...-

"தமிழக ஆட்சி!"